விஜயலக்ஷ்மி அமர்வு - சாயாவனம் (சா. கந்தசாமி)
நவீன நாவல்
- சாயாவனம் (சா. கந்தசாமி).
மனிதன் பேரியற்கையை அழிக்க கைக்கொள்ளும் பிரயத்தனங்களும் அதன் தோல்விகளும், அதனுள்ளிருந்தே அதற்கான வழிகளை கண்டடைந்து அழிப்பதுமாக, சிதம்பரத்திற்கும் வனத்திற்குமான போர் முற்றுபெறும் தருணம்... நிலம் தனது பலவிதமான மணங்களையும் சுவைகளையும் வண்ணங்களையும் இழந்து ஒரே ருசியுடையதாக மாறுதல். இரப்பர், காடு போன்ற நவீன வாசிப்புகளையும் காண்டவ வனமழித்தல் என்ற மரபார்ந்த வாசிப்பையும் இணைவைத்துக் கொள்ளக்கூடிய வாசிப்பாக விரிந்த நாவல்.
நாவல்பகுதி
-----------------------
பசுமையை
மிஞ்சிய செந்தழல் / அந்தி வானத்தின் கோலம்/ தோட்டம் முழுவதும் தீ பரவிவிட்டது போல
’ செந்தமல்’முழுமையாகக்’ தெரியாவிட்டாலுங்கூடக்’ கரும்புகைஒரு தோற்றம்/ காற்றின் வேகத்தில்
நிற்க முடியாத அனல் வீச்சு! மூன்றுபேரும் மெல்ல மெல்லப் பின் வாங்கிக் குடிசைக்குச்
சென்றார்கள். மரங்களின் மறைவில் பந்து பந்தாய் மரம்மேல்நோக்கிச் செல்வது தெரிந்தது.
தீயின் போக்கையும் தோட்டத்தையும் நெடுநேரம் ஆழ்ந்து நோக்க, தேவர்
சொன்னார்’; " ரெண்டு நாளைக்கு எரியும்போல இருக்குங்க, தம்பி”
** (*)** ரண்டு நாளைக்குங்களா, மாமா”?
ஆமா. ஏன்?
கேட்டேன்.”
* இம்மாம் பெரிய தோட்டம் எரியணுமே /”
"ஆமாங்க.”
கரும் புகை பந்தாக எழும்பி, நேராக மேல்கோக்கிச் சென்றது. அதைத்
தொடர்ந்து நெருப்புப் பொறிகள் காலா பக்கமும் சிதறின.
** (*)** நெருப்பு மேலே கிளம்புது !”
“அதோ!, அதோ!......
------------
வான மண்டலம் முழுவதையும் கரும் புகையும் வெண் புகையும் கூடிக்கொண்டிருந்தன. பயங்கரமாகப் பறவைகளும் மிருகங்களும் அலறிக் கொண்டு ஓடின. தீ தன் பிடியில் சிக்கியதையெல்லாம் பொசுக்கிக் கொண்டு முன்நோக்குச் செல்கிறது.
சிதம்பரத்தின் கட்டிலில், குருட்டாம் போக்காய் -சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு காக்கை விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் துள்ளிக் குதித்தான். காக்கையைப் பார்த்ததும் புன்சிரிப்பு வெளிப்பட்டது. காக்கையின் காலைப் பிடித்துத் தீயை நோக்கி வீசியெறிந் தான். ஒரு ஓசையின்றி, சடசடப்பின்றி காகம் தீயில் போய் விழுந்தது. இறகு பொசுங்கிக் கருகச் சாம்பலாகும் காட்சியைக் காணவேண்டும் என்று மனத்துக்குள் ஓர் ஆவல். அலக்கை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான், அனல் வீச்சையும் பொருட்படுத்தாமல்.
காக்கை தீயில் பொசுங்கிக் கொண்டிருந்தது. அலக் கால் குத்தி, எரியும் காக்கையை மேலே தூக்கினான். ஒரு நெடி, வாடை, குப்பென்று அடித்தது. முகத்தைச் சுளித்துக் கொண்டு காக்கையை அலக்கோடு தீயில் செருகினான். அலக்கு, வேகமாக உள்ளே சென்றது.
அலக்கை வெளியே உருவிப் பார்த்தபோது, நிதான மாக எரிந்து கொண்டிருந்தது. இது இரண்டாவது அலக்கு-- கருக்கரிவாள் கட்டியது. தீ பற்றிய வேகத்தில் அரிவாள் வரையில் உள்ள பகுதி சாம்பலாகி விட்டது.அரிவாள் இன்றி எரியும் ௮ல்க்கைத் தீர்க்கமாக நோக்கி னான், அவன் மனத்தில் நெறி முறையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் ஓர் உணர்வு தோன்றியது. அவன் புளகாங்கிதமுற்றான். உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது; நிற்க முடிய வில்லை. வெறியுற்ற நிலையில், எரியும் அலக்கைத் தீயில் வீசியெறிந் துவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்தான்.
தீ சடசடவென்ற இரைச்சலோடு மேலுக்குத் தாவி, புன்னை மரத்தைச் சாடியது. இலைகளிலிருந்து கிளைகளுக்கும், கிளைகளிலிருந்து ௮டி மரத்திற்கும் ஒரு தாவல், உயர்ந்து, அலையலையாய்ப் படர்ந்து ௮டங்கும் தீயின் போக்கையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தரத்தில் தீ அற்புதம் நிகழ்த்துகிறது. ஓரோர் சமயம் தீயின் உக்ரம் அவனை நிலைகுலைய வைத்தது. இப் படியே போனால் என்ன அகும் ?
நேரம் செல்லச் செல்ல தீயின் கம்பீரம் கூடிக் கொண்டே வந்தது. புன்னை மரத்தில் கொடியாய் தாவிப் பாய்ந்து சென்று கொண்டிருந்த நெருப்பு நின்று எரிய ஆரம்பித்தது.
கட்டிலில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. காற்று அனலை கொண்டு வந்து முகத்தில் வீசியது.
--------
சிதம்பரம் தலையசைத்தான். சேவையின் அடிப் படையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அகம் தன்னளவில் வெகு தூரத்தில் இருப்பதுபோலவும், அதனோடு இணக்கமான முறையில் உறவு கொள்ள முடியாது போலவும் தோன்றியது,
“நரன், நரன்தான்-- வாழ்க்கை, வாழ்க்கைதான் ” என்று அந்தராத்மாவைச் சமாதானப் படுத் துவது மாதிரி சொல்லிக் கொண்டான். இந்தச் சொற்களுக்கிடையில் பரிதாபமான விதத்தில், வீழ்ச்சியுற்ற புளிய மரங்களும் நினைவிற்கு வந்தன. தேவர் பக்கம் திரும்பி, “நாம்ப - வொண்ணும் வேணுமென்னு அழிக்கலே ” என்றான்.
“உங்க மேலை நா ஒண்ணும் குத்தம் சொல்லலே !” ்
தெற்கு முனையிலிருந்து வடக்கு முனைக்குச் சென்றார்கள். தீயின்
ஆட்சி அங்கே முழுமையாகப் பரவ வில்லை, ஏழேட்டு மரங்கள் தமையை இழச்து நின்று கொண்டிருந்தன.
இலுப்பை மரத்தடியில் ஓரு காளை வெந்து கிடந்தது. சிதம்பரம் கருகிக் கடக்கும் காளையை
இரக்கத்தோடு நோக்கினான். மனத்தில் பழைய காட்சி தோன்றியது. அன்றைக்கு இருள் செறிந்த
கானகத்தில் ஆட்சி செலுத்திய மாடு இன்றைக்கு மடிந்து கிடக்கிறது!
---------
Comments
Post a Comment