Posts

Showing posts from May, 2025

அறிமுகம்

அமர்வு நடத்துவோர் வாசிப்பு பகுதிகளை தரும் பொழுது அவை இங்கு வலையேற்றம் செய்யப்படும்.  - விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்   காவிய முகாம் 2025 நிகழ்ச்சி நிரல்: வ. எண் அமர்வு தலைப்பு நேரம்           13.06.25: ( வெள்ளி) 1 கவி நிலவன் கம்பராமாயணத்தில் நிலக்காட்சி   காலை 10:30 - 11:30   தேநீர் இடைவேளை – 11:30 – 12:00 2 தேஜஸ் சமஸ்கிருத சந்த மரபு காலை 12:00 - 12:45 3 புவனேஸ்வரி கன்னட சிறுகதைகள்   மதியம் 12:45 - 1:30   மதிய இடைவேளை – 1:15 – 4:00 4 நாக நந்தினி Nexus by Yuval nova harari மாலை 4:00 - 4:45 5 ஞானசேகரன் கவிஞர் வெய்யிலும் மகிழ்ச்சியும்   மாலை 4:45 - 5:15 ...

பிரசன்ன கிருஷ்ணன் அமர்வு - சிறுகதை

2014 டிசம்பர் மாதம் "காலம்" இதழில் வெளிவந்த கதை "மாதா". ஷோபா சக்தியின் பெரும்பாலான சிறுகதைகளை போலவே இச்சிறுகதையும் புலம்பெயர்ந்த இலங்கை மக்களின் வாழ்வில் நடக்கும் அசாதாரணமான நிகழ்வுகளை மையப்படுத்திய கதை. கச்சிதமான கதையின் வடிவமைப்பையும், மனோன்மணி அம்மா கதாபாத்திரத்தின் முதிர்ச்சியையும், ஒரு தமிழ்/இந்திய குடும்பத்து ஆண்களின் மனநிலையையும், குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையையும் வெள்ளிமலையில் ஜூன் மாதம் விவாதிப்போம். ஒரு 'மாதா'வின் பார்வையிலிருந்து தூய்மை என்ற கருத்தையும் புரிந்துகொள்ள முயலலாம். இணைப்பு:     1. மாதா - ஷோபா சக்தி 

கவிநிலவன் அமர்வு - கம்பராமாயணத்தில் நிலக்காட்சி

 கம்பராமாயணத்தில் நிலக்காட்சி:  நாம் காணுகின்ற இந்த உலகினை கவி வேறொன்றாக்கி நம் கையில் தருகிறான். அதன்மூலம் இந்த நிலம் மீது தீராக் காதலை மூட்டிவைக்கிறான். கம்பன் தன் சொற்களின் ஊடாக படைத்துக்காட்டும் வியப்புமிகு உலகம் பற்றியது இந்த அமர்வு.   இரவு‌ வர்ணனை:  1.  ஆலம் உலகில் பரந்ததுவோ;     ஆழி கிளர்ந்ததோ, அவர் தம் நீல நிறத்தை எல்லோரும்     நினைக்க அதுவாய் நிரம்பியதோ, காலன் நிறத்தை அஞ்சனத்தில்     கலந்து குழைத்துக் காயத்தின் மேலும் நிலத்தும் மெழுகியதோ,     விளைக்கும் இருள் ஆய் விளைந்தவே. பொருள்: ஆலமான விஷம் உலகில் பரந்ததா? கடல் கிளர்ந்துபோனதா? அவருடைய (இராமனுடைய) நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாக நிரம்பியதோ? காலனுடைய நிறத்தை மையில் குழைத்து ஆகாயத்தின் மீதும் மண்ணின் மீதும் மெழுகினார்களோ? எங்கும் இருளாய்ப் பரந்து உள்ளதே!  (சீதை இராமன் மீது உண்டான காதலால் இரவைக் கண்டு புலம்புதல்)  2.  பரந்து மீன் அரும்பிய     பசலை வானகம், அரந்தை இல் முனிவரன்     அறைந்த சாபத்தால் நிரந்தரம் இமைப்பு இலா ...

ராஜமாணிக்கம் அமர்வு - முன்வரலாற்று எழுத்துரு

Image
என் தாத்தா கோவிந்த சாமி படையாட்சி நெற்றி நிறைய திரு நீறு பூசி தான் பிற நபர்களையே பார்ப்பார், நீறில்லா நெற்றி பாழ்ன்னு சொல்லுவார்.  பிறருக்கு நீங்க சிவன் கோவிலுக்கு போய்ட்டு வந்தது தெரிய நெத்தில விபூதி வைக்கறீங்க சரி,  நெஞ்சுல,அடிவயித்துல , கழுத்துல, பின் இடுப்பில்,கைல எல்லாம் விபூதி பட்டை பட்டையா போட்டு என்ன உபயோகம்ன்னு என் தாத்தாவிடம் கேட்ட பொழுது அது ஊர்த்துவ புண்டரீக சம்பிரதாயம்ன்னு சொன்னார். கோவில் வழிபாடு செய்ததை சொல்ல அல்ல, அது ஒவ்வொரு  ஆதி ஆத்மீக சாதகனும், சக ஆத்மீக சாதகனுக்கு நான் ஆன்மீக சாதனையில் , பிரம்மத்தை சரியையாக கொண்டு அறிய முற்படுவன்னு சொல்லும் சங்கேத மொழின்னு சொன்னார்.  பின்னர் என் சிறு வயதில் தந்தையோடு காசி சென்றிருந்த பொழுது , பல்வேறு முகங்கள் ஒரே பஸ்ம குறி, இனம் மொழி, நிலம், நிறம்,கல்வி என்று எவ்வளவோ மாறுபாடுகள் ஆனால் ஒரு திர்யக் புந்திர சம்பிரதாயம் அனைவரையும் ஒரே வழிபாட்டுக்குழுவினராக்கிய குறியீட்டு சம்பிரதாயம், என்பது ஒரு இனக்குழு அடையாளம் என்பது பற்றிய அறிதல். சங்கேத மொழிகள் , பரிபாஷைகள் பற்றிய   என் முதல் அறிதல் அப்போதிலிருந்து ...

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரன் சிறுகதைகள்

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரனின் சிறுகதைகள்  சரவணன் சந்திரனின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. அவரது சிறுகதைகளின் இலக்கிய வடிவத்தைப் புரிந்து கொள்ள, அவற்றின் கருப்பொருள், மொழிநடை, கதைசொல்லல் பாணி, மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஆகியவற்றை சரவணன் சந்திரனின் கீழ்க்காணும் மூன்று சிறுகதைகளின்  வழியே பார்க்கலாம். வாசிப்பு பகுதிகள்: 1.  https://tamizhini.in/2021/06/24/ஹோட்டல்-கே/ 2.  https://tamizhini.in/2023/01/31/யாதவப்-பிரகாசர்/ 3.  https://tamizhini.in/2022/04/25/மானு-மோராஸ்/

இசை அமர்வு - கம்பராமாயணத்தில் காதல்

இசை அமர்வு - கம்பராமாயணத்தில் காதல்   வாசிப்பு பகுதிகள்:   ஆவி ஒழியினும் ஆசை ஒழியா!

நிர்மால்யா அமர்வு - மொழியாக்கத்தின் நுட்பங்கள்

 மொழியாக்கத்தின் நுட்பங்கள்  மொழியாக்கம் என்கிற இலக்கிய வகைமை,  நவீன தமிழ் இலக்கிய சூழலில் தனி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது. பதிப்பகங்கள் நான்கு புத்தகங்களைப் பதிப்பிக்கும் போது அவற்றில் இரண்டு மொழியாக்கப் புத்தகங்களாக உள்ளன. உலக அளவில் அல்லது இந்திய அளவில் பேசப்படும்  ஒரு புத்தகம் உடனுக்குடன் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் சூழல் இன்று உருவாகி உள்ளது. கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்தாக் எழுதிய ‘ஹார்ட் லேம்ப்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு 2025 ன் சர்வதேச  புக்கர் பரிசை பெற்றது. அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் அதனுடைய தமிழ் மொழியாக்கத்தைப் பதிப்பிக்கும் அறிவிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. கடந்த வருட பரிசை வென்ற  இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின்  தமிழ் மொழியாக்கம் ‘மணல் சமாதி’ தற்போது விற்பனையில் உள்ளது. அசுரத்தனமான இந்த மொழியாக்க வேகத்திற்கு இடையில் மொழியாக்கத்தின் நுட்பங்களைப் பற்றிய உரையாடல்  அவசியமாக உள்ளது.  எனக்குத் தரப்பட்ட தலைப்பு மொழிபெயர்ப்பின் நுட்பங்கள். இலக்கிய மொழிபெயர்ப்புகளை  மொழியாக்கங்கள் எ...

தேஜஸ் அமர்வு - சமஸ்கிருத சந்த மரபு

  சமஸ்கிருத சந்த மரபு   “ சொல்லென்பது ஒலி. செவியுணரும் ஒலி அகமுணரும் ஒலியாலேயே இணைக்கப்பட்டுள்ளது. ஒலிகளை இணைப்பதன் அறிவையே சந்தஸ் என்றனர் முன்னோர். தவளைமுட்டைகளை அன்னையின் கருவறைப்பசை இணைத்திருப்பதுபோல சொற்களை சந்தஸ் இணைக்கிறது. ஓடும் பிரக்ஞை எனும் ஓடையில் ஆடி அலைந்து ஒன்றாய் நிற்க அவற்றுக்கு உதவுவது சந்தஸே. அவை ஒவ்வொன்றும் தன்னை தானறிந்து உயிர்கொண்டெழும்போது சந்தஸை மீறிச்செல்கின்றன. சந்தஸில்லாத சொல் என்பது வானமில்லாத விண்மீன் வெளி என்றே அறிக. ”                                                 வண்ணக்கடல் - வெண்முரசு சந்தஸ் என்பது செயுள்களை வடிவைக்கும் யாப்பு முறை. இது ஃசத் என்னும் மூல சொல்லிலிருந்து வருவதாக சொல்வதுண்டு. ஃசத் என்றால் மகிழ்விப்பது அல்லது மறைப்பது என்ற பொருள். அதாவது சந்தஸுடன் கூடிய மந்திரங்கள் தேவர்களை (அல்லது கேட்போரை) மக...