ராஜமாணிக்கம் அமர்வு - முன்வரலாற்று எழுத்துரு
என் தாத்தா கோவிந்த சாமி படையாட்சி நெற்றி நிறைய திரு நீறு பூசி தான் பிற நபர்களையே பார்ப்பார், நீறில்லா நெற்றி பாழ்ன்னு சொல்லுவார். பிறருக்கு நீங்க சிவன் கோவிலுக்கு போய்ட்டு வந்தது தெரிய நெத்தில விபூதி வைக்கறீங்க சரி, நெஞ்சுல,அடிவயித்துல , கழுத்துல, பின் இடுப்பில்,கைல எல்லாம் விபூதி பட்டை பட்டையா போட்டு என்ன உபயோகம்ன்னு என் தாத்தாவிடம் கேட்ட பொழுது அது ஊர்த்துவ புண்டரீக சம்பிரதாயம்ன்னு சொன்னார். கோவில் வழிபாடு செய்ததை சொல்ல அல்ல, அது ஒவ்வொரு ஆதி ஆத்மீக சாதகனும், சக ஆத்மீக சாதகனுக்கு நான் ஆன்மீக சாதனையில் , பிரம்மத்தை சரியையாக கொண்டு அறிய முற்படுவன்னு சொல்லும் சங்கேத மொழின்னு சொன்னார்.
பின்னர் என் சிறு வயதில் தந்தையோடு காசி சென்றிருந்த பொழுது , பல்வேறு முகங்கள் ஒரே பஸ்ம குறி, இனம் மொழி, நிலம், நிறம்,கல்வி என்று எவ்வளவோ மாறுபாடுகள் ஆனால் ஒரு திர்யக் புந்திர சம்பிரதாயம் அனைவரையும் ஒரே வழிபாட்டுக்குழுவினராக்கிய குறியீட்டு சம்பிரதாயம், என்பது ஒரு இனக்குழு அடையாளம் என்பது பற்றிய அறிதல். சங்கேத மொழிகள் , பரிபாஷைகள் பற்றிய என் முதல் அறிதல் அப்போதிலிருந்து துவங்கியது.
சேப்பியன்களுக்கு முன்பான நியாண்டர்தால்கள், டென்னிஸோவியன்கள், எரக்டஸ்கள், நாளடிகள் உள்ளிட்ட நம் தொல் மானுட மூதாதையர்கள் சுமாராக 15 லட்சம் ஆண்டுகளாக குழுவாக வேட்டையாடி, காடோடி, உண்டு , களித்து, இறைவனை தொழுது, மாண்டு, நினைவை மீட்டி வாழ்ந்திருக்கிறார்கள். கொசஸ்தலை ஆற்றின் கரையில், நிலவியளாளர் ராபர்ட் புருஸ் பூட் அக்சுலியன் டூல்ஸ், மெட்ராஸ் ஸ்டோன் டூல்ஸ் எனும் கல் ஆயுதங்களை கண்டறிந்து காலக்கணிப்பு செய்யும் போது தான் அவை 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் தொல் முதாதைகளின் வேட்டை கருவிகள் என்பது மானுடவியலாளர்களின் திருப்பு முனை கண்டுபிடிப்பாக அறிந்தார்கள்.
தொல் கைக்கோடாறிகள், ஸ்கிரேப்பர்களில் சில ஒரே மாதிரியான சின்னங்கள், அடையாளங்களின் பொறிப்பை பார்த்தார்கள். பின்னர் அதே வகையான குறியீடுகளை குகை ஓவியங்கள், பாறை செதுக்குகள், கல் பதுக்கைகளில் கண்டறிந்தனர். அப்படி ஒரு 32 வகையான குறியீடுகளை கண்டறிந்துள்ளனர். இந்த குறியீடுகளையே மொழிக்கு முன்பான துவக்க புள்ளியாக மானுடவியலாளர்களும் , மானுட மொழியியல் வரலாற்று வல்லுநர்களும் ஒப்புக்கொண்டு முன் வைக்கிறார்கள்.
குழுவாக வேட்டையாடிய தொல் மானுட இனக்குழுவிற்குள் வேட்டையின் தந்திரங்களை, வியூகங்களை , செயல் திட்டங்களை விளக்கி கூற மொழியின் அவசியம் உணரப்பட்டு அது ஒரு குறியீட்டு மொழிதலாக இருந்து நவீன மொழிகளின் வளர்ச்சிக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது. தாள கதிகள் , வாயால் எழுப்பப்படும் விசித்திர சீழ்க்கைகள், ( whistling), கொம்புகளில் செய்யப்பட்ட காற்று கருவி ஒலிப்புகள், சித்திர விளக்கங்கள், புகை சங்கேத குறி பயன்பாடு, சைகை குறியீடுகள், இவைகள் தான் தற்போதைய எழுத்துக்கள், மொழிகளின் துவக்கப்புள்ளிகள்.
பல லட்சம் ஆண்டுகளாக உலகம் முழுக்க பரவி இருந்த இந்த குறிகள், குறியீடுகள், சங்கேதங்கள், குழு உக்குறிகள், குலச்சின்னங்கள், பின்னர் பரிணாம மாற்றத்தில் எழுத்துக்களாகவும், மொழிகளாகவும் உருமாற்றம் கொள்கின்றன. குறிகள், குறியீடுகள், சங்கேதங்கள் பார்வை திறன் சவால், நடமாட்ட சவால் உள்ள, பயண சலிப்பு, வயது மூப்பு காரணமாக குறைந்த இடப்பெயர்வு செய்பவர்களிடமும் விளக்குவதற்காக எழுத்துருக்கள், குறியீடுகளை தாண்டி மொழியின் அவசியம் உருவாகிறது.
மொழிகள் உருவாவதற்கு முன்பே சிந்தனைகள், சட்டங்கள், வழிபாட்டு சடங்குகள், வேட்டை நடைமுறைகளை சொல்லும் குறியீட்டு மொழி கட்டமைப்பு ( syntex) உருவாகி புழக்கத்தில் இருக்கிறது. இவையே பாறை செதுக்குகளாக(geoglyphs, petro glyphs) இன்றும் காணக்கிடைக்கிறது. இந்த வகை proto linguistic symbols கள் பின்னர் ஐடியோகிராம்கள், பிக்டோ கிராம்கள், எகிப்திய ஹியரோகிளிப்களாக பரிணாம மாற்றம் கொள்கின்றன.
இதற்கு இணையாகவே மோர்ஸ் சங்கேத தாளம் போன்ற ஒலிக்குறி, நிற வேற்றுமையோடு கூடிய புகை மொழி, நிறச்சங்கேதம், சைகைச்சங்கேதம், உடல் மொழி, அபி நயம், நடனம், காற்று கருவிகள், கம்பி கருவிகள் , ஓவியங்களும் தொல் எழுத்துரு, தொல் மொழியின் ஒரு பகுதியாக இருந்து இன்று வரை நீடித்து நிற்கிறது.
விலங்குகளின் எலும்பில் பொறிக்கப்பட்ட சீன மந்தண எழுத்துக்கள், பாப்பிரஸ் தாளிலும், கல்லிலும், பொறிக்கப்பட்ட எகிப்திய ஹியரோகிளிப்கள், கார்ட்டூஷ்கள், களி மண் பலகைகளில் பொறிக்கப்பட்டு சுடப்பட்ட சுமேரிய , பாபிலோனிய க்யூனிபார்ம்கள், பாறைகளில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ள நாஸ்கா , ஜியோகிளிப்கள், ரத்நகிரி பாறை செதுக்குகள், சீன சித்திர எழுத்துருக்கள், ஜப்பானிய சித்திர எழுத்துக்கள், சிந்து சரஸ்வதி நாகரீக சித்திர எழுத்துக்கள், பாறைகளிலும், குகைகளிலும் செதுக்கப்பட்டுள்ள பிராமி, பிராகிருத, தமிழ், வட்டெழுத்து, தேவநாகிரி எழுத்துக்கள், செப்பேடுகள், சிலைகள், ஓவியங்களில் பார்வைக்கு படும் குறியிடுகள், புதிர் வடிவ சொற்கள், சித்திர புதிர்கள், குறியீட்டு கவிதைகள், புதிர் கவிதைகள் என்று பல்வேறு. தடங்கள் , வரலாற்றுக்கு முந்தைய மொழி, எழுத்துருவின் தடங்களை தொடர்ந்து இதன் ஊற்றுக்கண்களாக இருக்கும் தொல் எழுத்துக்களை நாம் வரலாற்றோடு சேர்ந்து காண இருக்கிறோம்.
இதன் அடுத்த பகுதியில்,
1. ரோஸேட்டா கல்
2. நியூன்னிஸ் செதுக்குகள்
3. ஜியாஹ் குறியீடுகள்
4. ப்ரோட்டோ எலாமைட் சித்திர எழுத்துக்கள்
5. வின்கா குறியீடுகள்
6. தனுபே குறிப்புகள்
7. எகிப்திய சித்திர எழுத்துக்கள்
8. சுமேரிய களி மண் குறிப்புகள்
9.மாயன் சித்திர எழுத்துக்கள்
10.ஹரப்பாவின் சித்திர எழுத்துக்கள்.
நன்றி
” இந்த நூற்றாண்டு முழுக்க பாரத அன்னையே உங்கள் குலதெய்வமாக இருக்கட்டும் “
ரோஸாட்டா
with kind regards,
Er.V.Raja manickam B.e., M.e.,(Str,)
Idea property developers,
312,Best compex, kumaran road
tiruppur 4
98946-12304 / 72008 - 55666


Comments
Post a Comment