முத்துக்குமரன் அமர்வு - நெய்தல் திணைப் பாடல்கள்

முத்துக்குமரன் அமர்வு - நெய்தல் திணைப் பாடல்கள்:  

இன்றைய நெய்தல் நில மக்களின்  வாழ்வியலையும் பண்பாட்டையும் தொழிலையும் நெய்தல் திணை பாடலைக் கொண்டு நான் நேரடியாகவே வாழ்ந்த என் அனுபவங்களை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

வாசிப்புப் பகுதிகள்:

நெய்தல் பாடல் 1 : நற்றிணை (49) - கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார்


*படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்

தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;

முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்

படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;

கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, 

எமரும் அல்கினர்; ''ஏமார்ந்தனம்'' எனச்

சென்று நாம் அறியின், எவனோ தோழி!

மன்றப் புன்னை மாச் சினை நறு வீ

முன்றில் தாழையொடு கமழும்

தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?*


நெய்தல் பாடல் 2 : அகநானூறு(30) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்


*நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,

கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,

துணை புணர் உவகையர் பரத மாக்கள்

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,*


*உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்   

ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,

அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,*


*பெருங் களம் தொகுத்த உழவர் போல,

இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,*


*பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,        

கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!*


*பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்

தண் நறுங் கானல் வந்து, ''நும்

வண்ணம் எவனோ?'' என்றனிர் செலினே?*


நெய்தல் பாடல் 3 : குறுந்தொகை (163) அம்மூவனார் 


 *யார் அணங்குற்றனை கடலே! பூழியர்

சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன

மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.

வெள் வீத் தாழை திரை அலை

நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?*

Comments

Popular posts from this blog

அறிமுகம்

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரன் சிறுகதைகள்