புவனேஸ்வரி அமர்வு - கன்னட சிறுகதைகள்
Uploaded 4 short stories in this link -
https://drive.google.com/drive/folders/19jeAr3LfeTQIss1lEmQrm4am9l57eT6-
அமர்வு குறித்து:
தோராயமாக 5ஆம் நூற்றாண்டில் ஜைனமதத்தின் தாக்கத்துடன் கன்னட இலக்கியம் தொடங்கியது. மாநிலத்தில் மத பின்புலம் மாறிய பொழுது, லிங்காயத்துகள் மற்றும் வைணவர்கள் ஆகியோரின் தாக்கம் 18ஆம் நூற்றாண்டு வரை இலக்கியத்தில் தொடர்ந்தது. 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய இலக்கியத்தை நவோதய, பிந்தைய நவோதய, நவ்ய மற்றும் நவோயத்தரா/பண்டாயா என பிரிக்கின்றனர்.
நமது அமர்வில் நாம் வேறு வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட நான்கு சிறுகதைகளை விவாதிக்க உள்ளோம்.
1. மீனாட்சியின் வீட்டு வாத்தியார் என்ற கதையை இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான குவேம்பு எழுதியுள்ளார். இவர் ஞானபீட பரிசைப் பெற்ற முதல் கன்னட எழுத்தாளர். பத்மபூஷண், பத்மவிபூஷண், சாகித்ய அகாதமி போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞராயும், தலைமுறைகளைத் தாண்டி மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘விஸ்வ மனவ’ (உலக மனிதன்) என்ற தத்துவத்தின் வழி பயணித்தவராகவும் அறியப்படுகிறார். நாம் இங்கு படிக்கும் குவேம்புவின் கதை ரொமாண்டிஸிச பாணியில் எழுதப்பட்டாலும், யதார்த்தமான கருப்பொருளைக் கொண்டது. அதன் உட்பொருளை பரிதாபத்துடன் கலந்த நையாண்டி வாயிலாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதை வாழ்வியல், சமுதாயச் சூழல், மற்றும் மனித மனத்தின் விந்தையயும் சித்தரிக்கிறது. கதாநாயகனின் தானே மனதில் காதலைக் கற்பனை செய்வதும், கற்பனைக் காதலியின் திருமணம் விருப்பமின்றி நடந்ததாக கற்பனை செய்வதும், பின்னர் கணவன்-மனைவி ஜோடியை நேரில் சந்திக்கும் போது ஏற்பட்ட மனமாற்றமும் திறமையாக கூறப்பட்டுள்ளது. மனித மனத்தின் விளையாட்டு கால மாற்றத்தால் பெரிதாக மாறாததை இந்த கதை இன்றும் நமக்கு அர்த்தப்படுவதில் இருந்து தெரிகிறது.2. மாஸ்தி வெங்கடேஷ அய்யங்கார் எழுதிய “ஜோகி அஞ்சப்பாவின் கோழி” என்ற கதை, ஒரு கிராமத்தில் முதியவர் கோரும் அல்லது கிடைக்கும் மரியாதையில் தொடங்குகிறது. பின்னரி நீதித்துறையின் நிலை, பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவிய லஞ்ச நிலைமை மற்றும் அதிகாரம் பெற்றவர்கள் கொண்ட தேவைகள் குறித்து குறிப்பிடுகிறது. இக்கதை நகைச்சுவையுடன் அமைந்திருந்தாலும், மனிதர்கள் தங்களை பாதுகாக்க எப்படிப் பட்ட சூழ்ச்சித் தனமும், குறுகிய நயவஞ்சனையும் நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. மனித உறவுகள், சமூக நிலைகள் மற்றும் கடவுளுக்கு இணையாக அதிகாரத்தை மதிக்கும் மனித மனப்பான்மை போன்றவை கதையில் பேசப்பட்டு, வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன.
3. யு ஆர் அனந்தமூர்த்தியின் படைப்புகள் பல இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன், முக்கியமான இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளன. அவரது பெரும்பாலான படைப்புகள் மனிதர்களின் உளவியல் தன்மைகள். அவர்களுடைய வேறுபட்ட சூழ்நிலைகள், வேறுபட்ட தருணங்களில் எப்படி வெளிப்படுகின்றன என்பதை ஆராய்கின்றன. அவரது எழுத்துகள், பிராமண குடும்பங்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள்/ சவால்கள் முதல், அரசியலால் பாதிக்கப்படும் நிர்வாகிகள் தங்கள் வேலையை எப்படி எதிர்நோக்குகிறார்கள் என்பதுவரை பரந்த அம்சங்களை விசாரிக்கின்றன. அவர் தந்தை-மகன், கணவன்-மனைவி, தந்தை-மகள் ஆகியோருக்கிடையே சமுதாய மாற்றம் உருவாக்கும் முரண்பாடுகளுக்குள் கலந்திருக்கும் நுண்மையான அன்பை சித்தரிக்கின்றார். “சூர்யக் குதிரே” என்ற நாவலின் மையக் கதாபாத்திரமான வெங்கடா, வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்வதால், அவன் மகன் மற்றும் மனைவியால் புறக்கணிக்கப்படுகிறார். வெங்கடா தனது வாழ்க்கையில் எந்தவிதமான பொருளாதார வெற்றியும் பெறாத ஒரு தோல்வியடைந்த மனிதர். ஆனால், வாழ்க்கையின் துன்பங்களை மிகையாக மனதில் கொள்ளாமல், அம்மையின் அன்பில் வாழ்வதை வாழ்க்கையின் நோக்கமாகக் கருதும் எளிய மனிதர். வாழ்க்கையின் அனைத்து துன்பங்களிலும், ஒரு குழந்தை போன்ற ஆவலுடன் சிறிய விஷயங்களிலும் மகிழ்ச்சி காண்கிறார் – அதுபோலவே ஒரு நாள், அவரது மகன் எதிர்த்துப் போய் விட்ட பிறகு, அந்த மாலை வெங்கடா தனது மாடத்தில் பரப்பி விரிந்த சூரிய ஒளியில் ஜொலிக்கும் ஒரு வெட்டுக்கிளியைப் பார்த்து முழுமையாக அதில் மூழ்கியிருப்பதைக் காண்கிறோம்.
4. திவாகர் கன்னட இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்களிப்பு செய்தவர். அவரது கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடனும் கால பரிணாமத்தை ப்ரதிபலிபபவையாக உள்ளன . அவர் எழுதிய கதைகள் விசித்திரமான தருணங்களை செம்மையாக வெளிப்படுத்துகின்றன. “Hundreds of street to the palace of lights” என்ற கதையில், மன்னார்குடி கோதண்டபாணி என்ற பேசாத திரைப்பட காலத்தின் கதாநாயகன், காலமாற்றத்தை ஏற்க மறுக்கிறார். நிஜம் தாக்கும் போது, அவர் மனச் சிதைவிற்கு ஆளாகிறார். இந்தக் கதை குறிப்பிட்ட நேரத்தில் மிக முக்கியமாகத் தோன்றும் விஷயங்கள், காலம் கடக்கும்போது எவ்வளவு அர்த்தமற்றதாக மாறக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. நிறைவேறாத காதல், திரைப்படத் துறையில் கைவிடப்பட்ட கனவு, மாறும் காலத்திற்கு தகுந்தவாறு மாற முடியாத நிலை—இது யாருடைய வாழ்க்கையயும் புறட்டிப்போடக்கூடும் என்ற உண்மயை புலப்படுத்தும் கதை.
Comments
Post a Comment