என் தாத்தா கோவிந்த சாமி படையாட்சி நெற்றி நிறைய திரு நீறு பூசி தான் பிற நபர்களையே பார்ப்பார், நீறில்லா நெற்றி பாழ்ன்னு சொல்லுவார். பிறருக்கு நீங்க சிவன் கோவிலுக்கு போய்ட்டு வந்தது தெரிய நெத்தில விபூதி வைக்கறீங்க சரி, நெஞ்சுல,அடிவயித்துல , கழுத்துல, பின் இடுப்பில்,கைல எல்லாம் விபூதி பட்டை பட்டையா போட்டு என்ன உபயோகம்ன்னு என் தாத்தாவிடம் கேட்ட பொழுது அது ஊர்த்துவ புண்டரீக சம்பிரதாயம்ன்னு சொன்னார். கோவில் வழிபாடு செய்ததை சொல்ல அல்ல, அது ஒவ்வொரு ஆதி ஆத்மீக சாதகனும், சக ஆத்மீக சாதகனுக்கு நான் ஆன்மீக சாதனையில் , பிரம்மத்தை சரியையாக கொண்டு அறிய முற்படுவன்னு சொல்லும் சங்கேத மொழின்னு சொன்னார். பின்னர் என் சிறு வயதில் தந்தையோடு காசி சென்றிருந்த பொழுது , பல்வேறு முகங்கள் ஒரே பஸ்ம குறி, இனம் மொழி, நிலம், நிறம்,கல்வி என்று எவ்வளவோ மாறுபாடுகள் ஆனால் ஒரு திர்யக் புந்திர சம்பிரதாயம் அனைவரையும் ஒரே வழிபாட்டுக்குழுவினராக்கிய குறியீட்டு சம்பிரதாயம், என்பது ஒரு இனக்குழு அடையாளம் என்பது பற்றிய அறிதல். சங்கேத மொழிகள் , பரிபாஷைகள் பற்றிய என் முதல் அறிதல் அப்போதிலிருந்து ...
Comments
Post a Comment